கொலை மற்றும் கற்பழிப்பு வழக்கில் பீகார் இளைஞருக்கு வாழ்நாள் சிறை தண்டனை

காஞ்சிபுரம்:

கொலை மற்றும் கற்பழிப்பு வழக்கில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இந்திரஜீத் முக்கையா(25) என்பவருக்கு வாழ்நாள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிப்பு



காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் காவல் நிலையத்தில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இந்திரஜீத் முக்கையா(25) த/பெ மகேந்திரன் முக்கையா என்பவர் கடந்த 03.09.2020 அன்று தாங்கி கிராமத்தைச் சேர்ந்த சாந்தி என்பவரை கற்பழித்து கொலை செய்தது மற்றும் நாயக்கன் பேட்டையைச் சேர்ந்த சுதா என்பவரை வழிமறித்து பாலியல் வன்புணர்ச்சி செய்து தாக்கியது சம்மந்தமாக அப்போதைய வாலாஜாபாத் காவல்நிலைய காவல் ஆய்வாளர் திரு.ஜெயகுமார் அவர்கள் எதிரி மீது கொலை மற்றும் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து எதிரியை கைது செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார். பின்னர் வழக்கின் நீதிமன்ற விசாரணை செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

மேற்படி வழக்கில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர், அவர்களின் உத்தரவின்பேரில் வாலாஜாபாத் காவல் நிலைய ஆய்வாளர் திரு.பிரபாகர், நீதிமன்ற காவலர் செல்வி.ஸ்ரீபிரியா, செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்ற சிறப்பு அரசு வழக்கறிஞர் செல்வி.சசிரேகா. B.Com, B.L, ஆகியோர் இவ்வழக்கில் தனிக்கவனம் செலுத்தினார்கள்.


இந்நிலையில் இன்று (30.08.2023). மேற்படி வழக்கின் எதிரி இந்திரஜீத் முக்கையாவிற்கு செங்கல்பட்டு மகிளா நீதிமன்ற நீதிபதி திருமதி.M.எழிலரசி M.L., அவர்கள் மேற்படி எதிரி குற்றவாளி என உறுதிசெய்து வாழ்நாள் சிறை தண்டனை, ரூபாய் 31,000 அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும், இவ்வழக்கில் எதிரிக்கு தண்டணை பெற்றுதர சிறப்பாக புலன் விசாரணை மேற்கொண்ட காவல் ஆய்வாளர், நீதிமன்ற விசாரணை பணிகளை மேற்கொண்ட வாலாஜாபாத் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற காவலரை காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.

No comments

Thank you for your comments