பனை விதை நடும் பணிகளில் மாணவ- மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மேம்படுத்தல் அவசியமாகி உள்ளதால், இதற்கான பல்வேறு முன்னேற்பாடுகள் அரசு சார்பிலும் தனியார் தொண்டு நிறுவனங்களும் சார்பிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அவ்வகையில் விதைகள் தன்னார்வு அமைப்பு சார்பில் இதுவரை உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 30க்கும் மேற்பட்ட ஏரிகளில் பனை விதைகள் நடும் பணி நிறைவு பெற்றுள்ளது.
இந்நிலையில் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவை ஒட்டி காஞ்சிபுரம் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான உத்திரமேரூர் ஏரி கரைப்பகுதிகளில் ஒரு லட்சம் பனை விதை நடும் பணிகளை இன்று உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் துவக்கி வைத்தார்.
தற்போது உத்திரமேரூர் புனரமைக்கப்பட்டு வரும் நிலையில் இது போன்று பனை விதை நடும் நிகழ்வு ஏரிக்கு கூடுதல் பலத்தை அளிக்கும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
பனை விதை நடும் பணிகளை ஆதி தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் திருவேணி அகடமி மாணவ, மாணவிகளும் மேற்கொள்ள உள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர் ஞானசேகரன் , பேரூராட்சி தலைவர் சசிகுமார் , பேரூர் செயலாளர் பாரிவள்ளல் , லயன் வெங்கடேசன் , பேரூராட்சி கவுன்சிலர் தனசேகரன் , பசுமை விருதாளார் சரண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



.jpg)



No comments
Thank you for your comments