Breaking News

தொடர் கொலைகள்.. சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் நிகழும் தொடர் கொலைகளை அடுத்து சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 


காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மண்ணூர் பகுதியில் நேற்று மர்ம கும்பல் ரவுடி எபினேசர் என்பவனை நாட்டு வெடிகுண்டு வீசி படுகொலை செய்து விட்டு தப்பிச் சென்றது.ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து நாட்டு வெடிகுண்டுகளை வீசி கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் ஸ்ரீபெரும்புதூர் டி.எஸ்.பி அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. 

இதில் வடக்கு மண்டல ஐஜி கண்ணன், காஞ்சிபுரம் எஸ்.பி. சுதாகர், ஆவடி இணை கமிஷனர் விஜயகுமார், ஸ்ரீபெரும்புதூர் டி.எஸ்.பி சந்திரதாசன் உள்ளிட்டோர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.


No comments

Thank you for your comments