Breaking News

பிறந்தநாளில் கோவிலுக்கு சென்று திரும்பிய சிறுமி சாலை விபத்தில் பலி


ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அடுத்த ரெட்டிவலம் அருகே பொன்னியம்மன் பட்டறை பகுதியை சேர்ந்த குமார் (30) அவருடைய மனைவி முத்துலட்சுமி (28)

மாமியார் தெய்வமணி (65) மகன் ஆகாஷ் (9) மகள் அனுசுயா (13) ஆகிய ஐந்து பேரும் தன்னுடைய மகள் அனுசியா பிறந்த நாளை முன்னிட்டு ரெடிவலம் பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய பொழுது சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த லோடு ஆட்டோவின்  மீது நிலைபடுமாறி எதிர்பாராத விதமாக மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அனுசியா சம்பவ இடத்திலே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த நெமிலி காவல்துறையினர் படுகாயம் அடைந்த நான்கு பேரையும் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.விபத்தில் உயிரிழந்த மாணவி அனுசுயா உடல் கைப்பற்றப்பட்டு அரக்கோணம் மருத்துவமனைக்கு பிரேத பரிசதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குமார் மற்றும் ஆகாஷ் ஆகிய இருவருக்கு முதலுதவி சகிச்சை அளித்து பின்னர் மேல் சகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி முத்துலட்சுமி,தெய்வமணி ஆகிய இருவர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் தொடர் சகிச்சை பெற்று வருகின்றனர்.

தன்னுடைய பிறந்தநாளுக்கு கோவிலுக்கு சென்று திரும்பும் பொழுது மாணவி இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது...

No comments

Thank you for your comments