Breaking News

ஒன்றிய அரசை கண்டித்து 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் போராட்டம்

மத்திய அரசு 3 சட்டங்களின் மாற்றம் செய்வதைக் கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட வழக்கறிஞர்கள் சார்பில் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.


நூற்றாண்டுக்கு மேலாக நடைமுறையில் உள்ள இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், மற்றும் இந்திய சாட்சிய சட்டம் ஆகிய 3 சட்டங்களின் சரத்துகளை முழுமையாக மாற்றியமைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. 

இதற்காக கடந்த 11.08.2023 அன்று பாராளுமன்றத்தில் சட்ட முன்வடிவை ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ளது.

இந்த சட்ட முன்வடிவு கொடுங்கோல் ஆட்சிக்கு வழிவகுக்கும் என்பதால், தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு இதை கண்டித்து, உடனடியாக பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மூன்று கொடுங்கோல் சட்ட முன்வடிவுகளை திரும்பப்பெற வலியுறுத்தி 21ம் தேதி முதல் 31ம் தேதி வரை (வேலை நாட்களில் மட்டும்) நீதிமன்றத்தின் வளாகத்தின் முன்பு கண்டன முழக்க ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கங்கள் சார்பில் காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடைமுறையில் உள்ள சட்டங்களை மாற்றி அமைக்கும் ஒன்றிய அரசை கண்டித்து 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதனை காஞ்சிபுரம் வழக்கறிஞர்கள் அசோசியேஷன் துணை தலைவரும் காஞ்சிபுரம் சட்ட மன்ற உறுப்பினராக உள்ள சி.வி.எம்.பி. எழிலரசன் உண்ணாவிரதத்தை துவக்கி வைத்தார்.

இதில் காஞ்சிபுரம் பார் அசோசியேஷன், காஞ்சிபுரம் அட்வகேட்ஸ் அசோசியேஷன், லயர்ஸ் அசோசியேஷன், உத்திரமேரூர் மற்றும் ஶ்ரீபெரும்புதூர் பார் அசோசியேஷன் சங்கத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரத அறப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments