Breaking News

அப்பளம் தயாரிக்கும் கம்பெனியில் மின்சாரம் தாக்கியதில் காயமடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

 காஞ்சிபுரம்



காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட கைலாசநாதர் கோவில் தெரு திடீர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் தாஸ் இவர் கைலாசநாதர் கோவில் பின்புறம் பகுதியில் செல்வராஜ் என்பவர் நடத்தி வரும் அப்பள கம்பெனியில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 2-ம் தேதி சுரேஷ் தாஸ் அப்பள கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி காயமடைந்து மயங்கி விழுந்த நிலையில், தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அதிக கட்டணம் செலுத்த முடியாமல் போனதால், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து போய் உள்ளார்.

இச்சம்பவம் குறித்து சுரேஷ் தாஸ் குடும்பத்தினர் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ள நிலையில் புகார் மீது சிவ காஞ்சி போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து உள்ளனர்.

உயிரிழந்த சுரேஷ் தாஸுக்கு கீதா வயது 22 என்ற  மனைவியும், 11 மாத பெண் குழந்தையும், உள்ள நிலையில்  பாதிக்கப்பட்ட சுரேஷ் தாஸ் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் அஜாக்கிரதையாக செயல்பட்ட அப்பள கம்பெனி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டு தொகை பெற்று தர வேண்டும் என கோரிக்கை வைத்து காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.


புகார் மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் உயிரிழந்த சுரேஷ் தாஸின் உடலை வாங்காமல் போராட்டத்தில் ஈடுபடுவோம் தெரிவித்துள்ளனர்.

No comments

Thank you for your comments