Breaking News

நகர்ப்புற சுகாதார நிலையத்துக்கு குழந்தை நாடித்துடிப்பை கண்டறியும் கருவி

காஞ்சிபுரம்,செப்.12:

காஞ்சிபுரம் மாநகராட்சி பிள்ளையார்பாளையம் நகர்ப்புற சுகாதார நிலையத்துக்கு கர்ப்பிணிகள் கருவுற்றிருக்கும் போது குழந்தையின் நாடித்துடிப்பை கண்டறியும் கருவியை செவ்வாய்க்கிழமை இந்திய மருத்துவக் கழக நிர்வாகிகள் இலவசமாக வழங்கினார்கள்.


படவிளக்கம்: நாடித்துடிப்பு கண்டறியும் கருவியை பிள்ளையார்பாளையம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் டி.பி.சரஸ்வதியிடம் வழங்கும் பெண் மருத்துவப் பிரிவு நிர்வாகிகள்

இந்திய மருத்துவக்கழகம் காஞ்சிபுரம் கிளையின் பெண் மருத்துவப் பிரிவு சார்பில் பிள்ளையார்பாளையத்தில் செயல்பட்டு வரும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கர்ப்பிணிகள் கருவுற்றிருக்கும் போது குழந்தையின் நாடித் துடிப்பை கண்டறியும் கருவி இலவசமாக வழங்கப்பட்டது.இந்நிகழ்விற்கு இந்திய மருத்துவக் கழக காஞ்சிபுரம் கிளையின் தலைவர் எஸ்.மனோகரன் தலைமை வகித்தார்.கழக மாநில துணைத் தலைவர் பி.டி.சரவணன் முன்னிலை வகித்தார்.

கழக பெண் மருத்துவப் பிரிவின் முன்னாள் தலைவர்கள் டி.அங்கம்மாள்,ஜெ.இன்பவள்ளி ஆகியோர் நன்கொடையாக வழங்கிய கருவியை தற்போதையை தலைவர் எம்.நிஷாப்பிரியா,முன்னாள் தலைவர் வி.லட்சுமி ஆகியோர் மருத்துவர் டி.பி.சரஸ்வதியிடம் வழங்கினார்கள்.செவிலியர் சுஜாதா நன்றி கூறினார்.


No comments

Thank you for your comments