Breaking News

காஞ்சிபுரத்தில் பெயிண்டரை கொலை செய்தவர் கைது

காஞ்சிபுரம், செப்.20:

காஞ்சிபுரத்தில் புதன்கிழமை இரவு பெயிண்டரை கொலை செய்தவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


காஞ்சிபுரம் ஓரிக்கை காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் எல்.திருமலை(38)இவர் அப்பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது குடிபோதையில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் சந்நிதி தெருவைச் சேர்ந்த ராமு என்ற ராமச்சந்திரன்(45)என்பவர் திருமலையை கட்டையால் தாக்கியதில் அவர் தலையில் பலத்த காயம் அடைந்து உயிரிழந்தார்.

காஞ்சிபுரத்திலிருந்து உத்தரமேரூர் செல்லும் சாலையில் ஓரிக்கை மணிமண்டபம் அருகில் நடந்த இக்கொலைச் சம்பவம் தொடர்பாக காஞ்சிபுரம் தாலுகா போலீஸôர் வழக்குப்பதிவு செய்து கொலையாளியான ராமு என்ற ராமச்சந்திரனை கைது செய்துள்ளனர்.

No comments

Thank you for your comments