Breaking News

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி காஞ்சிபுரம் கோவில்களில் சுவாமி தரிசனம்

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்குரியதாக இருந்து வரும் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். 

முன்னதாக ஆலய அறங்காவலர் குழு உறுப்பினர் வ.ஜெகன்னாதன், அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி, உதவி ஆணையர் லட்சுமி காந்தன் பாரதி, கோவில் செயல் அலுவலர்கள் முத்துலட்சுமி, தியாகராஜன் , சீனிவாசன் மற்றும் கோயில் பூஜகர் காமேசுவர சிவாச்சாரியார் ஆகியோர் பூரண கும்பம் மரியாதையுடன் ஆளுநரை வரவேற்று ஆலயத்துக்குள் அழைத்துச் சென்றனர். 

இதனை தொடர்ந்து காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். 

கோவில் நிர்வாகத்தின் சார்பில் சங்கர மடத்தின் நிர்வாகிகள் கீர்த்திவாசன், ஜானகிராமன் திருக்கோவில் ஸ்தானீகர்கள் ஷியாமா சாஸ்திரிகள், நடன சாஸ்திரிகள் ஆகியோர் ஆளுநருக்கு கோவில் பிரசாதமும், காமாட்சி அம்மன் திருஉருவப்படமும் வழங்கினார்கள்.

 

பின்னர் காஞ்சி சங்கர மடத்திற்கு சென்று மகா பெரியவர் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தாவனத்தில் தரிசனம் செய்தார்.  

ஆளுநர் வருகையை முன்னிட்டு காஞ்சிபுரம் எஸ்.பி.  எம்.சுதாகர் தலைமையில் ஆலயங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.








No comments

Thank you for your comments