காஞ்சிபுரத்தில் 70 அடி உயர ஆதிசங்கரர் சிலைக்கு தமிழக ஆளுநர் மலர் தூவி அஞ்சலி
காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் சந்திர சேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மகா வித்தியாலய நிகர்நிலை பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இப் பல்கலைக்கழக வளாகத்தில் காஞ்சி காமகோடி பீடத்தின் 69 ஆவது மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பீடத்திற்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவை தொடர்ந்து ஸ்தூபி ஒன்று நிறுவப் பட்டிருந்தது.
இப்புதுப்பிக்கப்பட்ட ஸ்தூபியை தமிழர் ஆளுநர் ஆர்.என்.ரவி புதன்கிழமை திறந்து வைத்தார் . இதனைத் தொடர்ந்து ஸ்தூபி அருகில் உள்ள 72 அடி உயர ஒரே கல்லால் ஆன ஆதிசங்கரர் சிலைக்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடினார். இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், எஸ். பி. எம் .சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், சங்கரா பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.வி. ராகவன், பதிவாளர் சீனிவாசன் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.


.jpg)
.jpg)

.jpg)
No comments
Thank you for your comments