Breaking News

ஊட்டசத்துக் குறித்த விழிப்புணர்வு பேரணி

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஊட்டசத்துக் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கலைசெல்வி மோகன் தொடங்கி வைத்தார்.


ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட திட்ட அலுவலகம் சார்பில் முதல் வாரத்தில் பிரத்தியேக தாய்ப்பால் புகட்டுதல் மற்றும் அதற்கு இணையான உணவு அளித்தல் , இரண்டாம் வாரத்தில் ஆரோக்கியமான குழந்தைகளை கண்டறிதல் மற்றும் ஊட்டச்சத்து மற்றும் முன்பருவக் கல்வி யோகா உள்ளூர் உணவு போன்ற ஆய்வு நிகழ்ச்சிகள் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையினை பின்பற்றுதல் குறித்து எடுத்துரைக்கப்படும்.

மூன்றாவது வாரத்தில் என் மனம் என் நாடு மற்றும் பழங்குடியினர் மையமாகக் கொண்டு ஊட்டச்சத்து உணர்த்திறன் செயல்படுத்துதல் மற்றும் நான்காவது வாரத்தில் ரத்த சோகை பரிசோதனை,  ஒட்டுமொத்த ஊட்ட சத்துணவு விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்பாக நிகழ்ச்சிகள் நடத்துதல் என பின்பற்றப்பட்டு வருகிறது.

அவ்வகையில் இன்று காஞ்சிபுரம் மாவட்ட குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இதனை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் துவக்கி வைத்தார். இதில் அங்கன்வாடி பணியாளர்கள் 150 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி மேட்டு தெரு வரை பேரணையாக சென்று ஊட்டசத்துக் குறித்த விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பி விழிப்புணர்வு செய்தனர்.

மேலும் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் இடத்தில் ஊட்டச்சத்து உணவுகள் எவை,  அதனால் என்ன பயன்,  அதனுடைய மாதிரி உணவுகளையும் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு அளித்து விழிப்புணர்வு செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் கல்யாணி , சமூக நல அலுவலர் பானுமதி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments