தமிழக முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
காஞ்சிக்கு வருகை தரும் தமிழக முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக சார்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் முக்கியமான ஒன்றான குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இதற்கான விண்ணப்பங்கள் நியாய விலை கடை ஊழியர்களால் வழங்கப்பட்டு இரண்டு கட்ட சிறப்பு முகாம் நடைபெற்று விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு தற்போது அரசு அலுவலர்களால் நேரடி ஆய்வின் மூலம் பயனாளிகள் தேர்வு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட துவக்க விழா அண்ணா பிறந்தநாள் அன்று காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட உள்ளது.
இதற்காக காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் திமுகவினர் முதல்வரை வரவேற்க பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இன்று தமிழ்நாடு சிறு குறு தொழில் நிறுவனங்கள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் , மாவட்ட செயலாளரும் , உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினரும் ஆன சுந்தர் , எம்.பி செல்வம் , காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் எஸ் பி சுதாகர் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆய்வு மேற்கொண்டு அதன்பின் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.
இந்நிலையில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட ம் , வடக்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் கூட்டம் ஒன்றிய செயலாளர் படுநெல்லி பாபு முன்னிலையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுதல், காஞ்சிக்கு வருகை தரும் முதல்வரை பெரும் திரளாக ஒன்று கூடி கழகக் கொடியுடன் வரவேற்பு செய்தல், வரும் 17ஆம் தேதி வேலூரில் நடைபெறும் முப்பெரும் விழாவிற்கு பெருந்திரளாக செல்லுதல் உள்ளிட்ட நிகழ்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும் தொடர்ந்து கழக நிகழ்வுகளுக்கு அனைவரும் கலந்து கொள்ளுதல், அண்ணா பிறந்த நாளில் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இயன்ற அளவில் நலதிட்ட உதவிகள் வழங்கல் என பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய செயலாளர் படுநெல்லி பாபு தெரிவித்துள்ளார்.
No comments
Thank you for your comments