காஞ்சிபுரம் தேவராஜசுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.30.33 லட்சம்
காஞ்சிபுரம்,செப்.27:
காஞ்சிபுரம் தேவராஜசுவாமி கோயிலில் கடந்த ஒரு மாதத்துக்கு பின்பு புதன்கிழமை உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தொகை ரூ.30,33,488 இருந்தது.
அத்திவரதர் புகழ் பெற்ற காஞ்சிபுரம் தேவராஜசுவாமி கோயிலில் கடந்த ஒரு மாதத்துக்கு பின்பு 2 உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன.அதில் ரொக்கமாக ரூ.30,33,488 இருந்தது.தங்கம்}120 கிராமும்,வெள்ளி 185 கிராமும் இருந்தது. கோயில் செயல் அலுவலர் ச.சீனிவாசன் முன்னிலையில் கோயில் பணியாளர்கள் மற்றும் சேவா அமைப்பினரால் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டு பின்னர் அத்தொகை வங்கியில் இட்டு வைப்பு செய்யப்பட்டது.
காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கடந்த ஒரு மாதத்திற்கு பின்பு 6 உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன.அறநிலையத்துறை ஆய்வாளர் திலகவதி மற்றும் கோயில் செயல் அலுவலர் ந.தியாகராஜன் ஆகியோர் தலைமையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன.அதில் ரொக்கமாக ரூ.6,54,459 இருந்தது.தங்கம் 25,800 கிராமும், வெள்ளி 298.400 கிராமும் இருந்தன.
படவிளக்கம்}காஞ்சிபுரம் தேவராஜசுவாமி கோயில் உண்டியல் காணிக்கைகளை திறந்த பின்னர் எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த கோயில் பணியாளர்கள்
No comments
Thank you for your comments