ஸ்ரீபெரும்புதூர் அருகே விபத்து புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் பலி - கண் தானம் செய்த பெற்றோர்..
காஞ்சிபுரம் :
![]() | |
மணிகண்டன் & கார்த்திக் |
தனியார் நிறுவன ஊழியர்கள்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த படப்பை முருகாத்தம்மன் பேட்டையில் வசித்து வருபவர் சங்கர். இவரது மகன் மணிகண்டன் (வயது 21).
இவரும் படப்பையில் தங்கியுள்ள திருவள்ளுவரைச் சேர்ந்த கார்த்திக் (26) என்பவரும் பனையூர் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர்.
விபத்து
இந்நிலையில் இருவரும் வேலை முடிந்து மோட்டார்சைக்கிளில் படப்பை நோக்கி வந்து கொண்டிருந்தனர். ஸ்ரீபெரும்புதூர் பனையூர் அருகே முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் மீது மோட்டார்சைக்கிள் மோதியதில் இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த ஒரகடம் போலீசார் இருவரின் உடலையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுமாப்பிள்ளை
விபத்தில் பலியான கார்த்திக்குக்கு கடந்த 3ஆம் தேதி தான் திருமணம் நடைபெற்றுள்ளது.
மேலும் மணிகண்டனின் இரு கண்களும் நல்ல நிலைமையில் இருந்ததால் மணிகண்டனின் பெற்றோர் சங்கர் மணிகண்டனின் இரு கண்களையும் தானம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments
Thank you for your comments