Breaking News

காஞ்சிபுரத்தில் ரூ.1.90 கோடி மதிப்பில் 222 வேளாண் இயந்திரங்கள் வழங்கினார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்

காஞ்சிபுரம் மாவட்டம்,  வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்  உள்ள அண்ணா காவல் அரங்கத்தில்,  கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட கிராமங்களில் வேளாண் இயந்திரமயமாக்கல் உப இயக்க திட்டத்தின் கீழ்  கிராம விவசாயிகளுக்கு மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் ரூ.1.73 கோடி மதிப்பிலான 198 பவர் டில்லர்கள்,  4 விசைகளையெடுப்பான் மற்றும் கரும்பு அறுவடை இயந்திரங்களை வழங்கி, உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியம், மானாம்பதி ஊராட்சியில் துணை வேளாண் விரிவாக்க மைய கட்டிடத்தை திறந்து வைத்தார்கள்.



காஞ்சிபுரம் மாவட்டம்,  வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்கத்தில்,  இன்று (04.09.2023) கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட கிராமங்களில்  வேளாண் இயந்திரமயமாக்கல் உப இயக்க திட்டத்தின் கீழ் கிராம விவசாயிகளுக்கு மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் ரூ.1.73 கோடி மதிப்பிலான 198 பவர் டில்லர்கள், 4 விசைகளையெடுப்பான் மற்றும் கரும்பு அறுவடை இயந்திரங்களை வழங்கி, உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியம், மானாம்பதி ஊராட்சியில் துணை வேளாண் விரிவாக்க மைய கட்டிடத்தை திறந்து வைத்தார்கள்.

நடப்பு 2023-24-ஆம் ஆண்டு வேளாண்மை–உழவர் நலத்துறை நிதிநிலை அறிக்கையில்" தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் குறைந்து வரும் விவசாயிகளின் நல உடமையினைக் கருத்தில் கொண்டு, சிறிய வகை வேளாண் இயந்திரங்களின் பயன்பாட்டினை ஊக்குவிக்கும் அவசியம் கருதி தமிழ்நாடு அரசின் தொலைநோக்கு திட்டமான "கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டக்" கிராமங்களில், ஒரு கிராமத்திற்கு இரண்டு பவர் டில்லர் இயந்திரங்கள் என்ற அடிப்படையில் வரும் நிதியாண்டில் 2504 கிராமங்களுக்கு 43 கோடி ரூபாய் மானியத்தில் 5000 பவர் டில்லர்கள் வழங்கப்படும்" என்று அறிவிக்கப்பட்டு மேற்படி திட்டமானது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.  அதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ. 1.90 கோடி  மானியத்தில் 221 பவர் டில்லர்கள் மற்றும் 4 விசைகளை யெடுப்பான் கருவிகள் ஆக மொத்தம் 225 விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக முதற்கட்டமாக இன்று 04.09.2023 காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்கத்தில் ரூ.1.73 கோடி மானியத்தில் 198 பவர் டில்லர்கள் மற்றும் 4 விசை களையெடுப்பான் கருவிகள் மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர் வழங்கினார்கள்.

மேலும் ஒரு பயனாளிக்கு (ஆதிதிராவிடர்) கரும்பு சாகுபடிக்கேற்ற இயந்திர வாடகை மையம் அமைக்க ரூ. 1.14 கோடி மதிப்புள்ள கரும்பு அறுவடை இயந்திரம்,  ரூ.45 இலட்சம் மானியத்திலும் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியம், மானாம்பதி கிராமத்தில், நபார்டு வங்கி நிதி உதவியுடன் ரூ.38 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட துணை வேளாண் விரிவாக்க மைய கட்டிடத்தை மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திறந்த வைத்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.க.சுந்தர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.வி.எம்.பி.எழிலரசன், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.வெங்கடேஷ், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர், படப்பை திரு.ஆ.மனோகரன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் திருமதி.எம்.மகாலட்சுமி யுவராஜ், காஞ்சிபுரம்  ஒன்றிய குழுத்தலைவர் திருமதி.மலர்க்கொடி குமார், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழுத் துணைத்தலைவர் திருமதி.நித்தியா சுகுமார்,  வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர்  திரு. பா.சந்திரன், காஞ்சிபுரம் வேளாண்மை இணை இயக்குநர் திரு. எல். சுரேஷ், வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் திரு.வெ.தங்கராஜ், அரசு  அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.



வெளியீடு செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,  காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments