பள்ளிக்கு விடுமுறை எடுக்க கூடாது என மாணவனுக்கு அறிவுரை வழங்கிய ஆட்சியர்
கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க வந்த நிலையில் ஒத்தாசையாக உடன் வந்த மகன்களை இன்று ஏன் பள்ளிக்கு செல்லவில்லை என கேட்டு இனி பள்ளிக்கு விடுமுறை எடுக்க கூடாது என மாவட்ட ஆட்சியர் கண்டித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஆர்பாக்கம் கிராம பகுதியைச் சேர்ந்த சேகர் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளியான இவர் குன்றத்தூர் பகுதியில் அரசு பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சொந்தமான இடத்திற்கு பல வருடங்களாக பட்டா வழங்கவில்லை என மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்
அந்த புகார் மனுவை பெற்றுக் கொண்ட கலைச்செல்வி மோகன் இது குறித்து விசாரணை நடத்தி விரைவாக பட்டா வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
பின்பு அவருடன் அழைத்து வந்த மகன் மற்றும் அண்ணன் மகனை பள்ளிக்கு செல்லவில்லையா என மாவட்ட ஆட்சியர் கேட்டார் அதற்கு சேகர் அவர்கள் எனக்கு ஒத்தாசையாக வந்ததாகவும் நாளை பள்ளி செல்வதாகவும் தெரிவித்தார் இனி பள்ளியை விடுமுறை போடாமல் பள்ளிக்கு செல்ல வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
No comments
Thank you for your comments