ஒபிஎஸ் பொதுக்கூட்டத்துக்கு சதி செய்த இயற்கை
காஞ்சிபுரம்,செப்.3:
தொடர்ந்து பலத்த மழை பெய்து கொண்டே இருந்ததால் காஞ்சிபுரம் அருகே களியனூரில் ஓபிஎஸ் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
காஞ்சிபுரம் அருகே களியனூரில் ஒபிஎஸ் அணியினரின் பொதுக்கூட்டம் நடத்த பல்வேறு ஏற்பாடுகளை அவரது கட்சியை சேர்ந்த மாவட்ட செயலாளர் முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் ஏற்பாடு செய்திருந்தார்.கூட்டத்துக் கென நாடாளுமன்றம் வடிவில் பிரம்மாண்ட மேடை உட்பட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கூட்டம் தொடங்க இருந்த நேரத்தில் தொடர்ந்து பலத்த மழையாகவும்,விட்டு விட்டும் மழை பெய்து கொண்டே இருந்தது.
கூட்ட அரங்கிற்கு ஓபிஎஸ் வந்து சேர்ந்ததும் அவரது கட்சியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசுகையில் இப்படி ஒரு மழையையும்,இப்படி ஒரு கூட்டத்தையும் நான் பார்த்ததே இல்லை.பலத்த மழை காரணமாக மக்கள் அவதிப்படக்கூடாது என்பதற்காக கூட்டத்தை ஒத்தி வைப்பதாக அறிவித்தார்.காஞ்சிபுரத்தில் அண்ணா பிறந்த மண்ணில் மீண்டும் ஒரு பொதுக்கூட்டத்தை நடத்துவோம் என்று பேசினார். முன்னதாக காஞ்சிபுரத்தில் அறிஞர் அண்ணாவின் நினைவு இல்லத்திற்கு சென்று அவரது உருவச்சிலைக்கு ஓபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கூட்டத்தில் ஓபிஎஸ் அவர்களுக்கு மாவட்ட செயலாளர் ஆர்.வி.ரஞ்சித்குமார் சார்பில் வெள்ளி வாள் பரிசாக வழங்கப்பட்டது.களியனூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் கழக இணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்திலிங்கம்,துணை ஒருங்கிணைப்பாளர் ஜெ.சி.டி.பிரபாகரன்,கழக கொள்கை பரப்பு செயலாளர் வி.புகழேந்தி ஆகியோர் உட்பட தமிழகம் முழுவதும் கட்சி நிர்வாகிகள்,தொண்டர்கள் பலரும் திரளாக கலந்து கொண்டனர்.
படவிளக்கம்}காஞ்சிபுரத்தில் முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் நினைவு இல்லத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஓ.பன்னீர் செல்வம்.உடன் மாவட்ட செயலாளர் ஆர்.வி.ரஞ்சித் குமார் உள்ளிட்ட அவரது அணியின் நிர்வாகிகள்
No comments
Thank you for your comments