பழுதடைந்த கனரக வாகனத்தினால் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு
சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர் ,சுங்குவார்சத்திரம், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, ஆற்காடு ,வேலூர், குடியாத்தம், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூரு போன்ற பகுதிகளுக்கு நாள் ஒன்றுக்கு சுமார் ஆயிரக்கணக்கான பைக் ,கார் லாரிகள், பேருந்துகள் சென்ற வண்ணம் இருக்கும்.
அதேபோல் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்னை நோக்கி சென்ற வண்ணம் இருக்கும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த தேசிய நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்க பணிக்களும் நடைபெற்று வருவதால் ஆங்காங்கே சாலைகள் மாற்றிவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் சின்னையன் சத்திரம் அடுத்த சேக்காங்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த ஒரு கனரக டிரக் வாகனம் பழுதடைந்து சாலையின் குறுக்கே நின்ற காரணத்தினால் சென்னை பெங்களூர், பெங்களூர் சென்னை என இரண்டு மார்க்கமாக செல்லும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக 7 கிலோமீட்டர் தூரம் வரை நின்றதால், பணிக்கு செல்லும் அரசு ஊழியர்கள், தொழிற்சாலைக்கு செல்லும் பணியாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் சென்னை பெங்களூர் மார்க்கமாக செல்லும் வாகன ஓட்டிகள் என ஏராளமான அவதி உற்றனர்.
சம்பவ இடத்திற்கு காலதாமதமாக வந்த காவல்துறையினர் சாலையின் நடுவில் பழுதடைந்து நின்ற லாரியை இரண்டு கிரேன்கள் மற்றும் ஜேசிபி உதவியுடன் அப்புறப்படுத்தினர்.
காவல்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளின் அலட்சியப் போக்கினால் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் அவதி உற்றனர். அதிலும் குறிப்பாக பெண்கள் இயற்கை உபாதைக்கு கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments
Thank you for your comments