10 ம் வகுப்பு மாணவி காரில் கடத்தலா? - நெமிலி போலீசில் தாய் புகார்
அரக்கோணம் :
நெமிலி அருகே 10 ம் வகுப்பு மாணவியை மூன்று வாலிபர்கள் காரில் கடத்தியதாக பரபரப்பு தகவல்கள் வெளியானது.
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த திருமால்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ் (26). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார்.
திருமால்பூர் பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒருவரை சதீஷ் தனது நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து மாணவியை செய்யாறில் தனது உறவினரின் காதணி விழாவிற்கு அழைத்துச் சென்று மறுநாள் 12ம் தேதி வீட்டுக்கு அழைத்து வந்து விட்டுள்ளார்.
அதே நேரம் எந்தவித கெட்ட எண்ணத்துடனும் மாணவியுடன் சதீஷ் பழகவில்லை . காரில் அழைத்து செல்லும்போதும் எந்தவித சம்பவங்களும் நடக்கவில்லை என்று கூறப்படுகிறது.
ஆனால் மாணவியின் தாயார் நெமிலி போலீசில் தன் மகளை சதீஷ் என்பவர் காரில் அழைத்துச் சென்றார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் நெமிலி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments
Thank you for your comments