Breaking News

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) -2023 தேர்விற்கான இலவச நேரடி பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) -2023 தேர்விற்கான இலவச நேரடி பயிற்சி வகுப்பு குறித்து தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல் தெரிவித்துள்ளதாவது, 

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் படித்து முடித்தவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் விரைவில் காலிப்பணியிடத்திற்கான அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது.  இடைநிலை ஆசிரியர் பணியிடத்திற்கு தோராயமாக 6553 காலிப்பணியிடங்களுக்கும், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு தோராயமாக 3587 பணியிடங்களுக்கான போட்டித்தேர்வுகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படவுள்ளதாக தெரிகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தினை சேர்ந்த தகுதியான, ஆசிரியர் பட்டயப்படிப்பு மற்றும்  பட்டப்படிப்பு முடித்தவர்கள் TRB  போட்டித்தேர்வினை எழுதி  பயனடையும் வகையில், அதற்கான நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள், தங்களது புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை ஆகிய விவரங்களுடன் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்புக்கொண்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 044-27237124 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 

மேலும், இப்பயிற்சி வகுப்புகள் ஆகஸ்டு 21-ம் தேதி  தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இப்பயிற்சியில் சேர்ந்து பயன்பெறுமாறு  மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன்.இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.


test banner

No comments

Thank you for your comments