Breaking News

சாலையோர வியாபாரிகளுக்காக வங்கி கடன் வழங்கல்

தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்க  திட்டத்தின் கீழ் சாலையோர வியாபாரிகளுக்காக வங்கி கடன் வழங்கும் நிகழ்ச்சி பேர்ணாம்பட்டு நகராட்சி சார்பாக நடைபெற்றது


வேலூர் மாவட்டம் தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கத் திட்டத்தின் கீழ் சாலையோர வியாபாரிகளுக்காக வங்கி கடன் வழங்கும் நிகழ்ச்சி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது 

இந்த நிகழ்ச்சியில் வங்கி அதிகாரிகளும்  நகராட்சி அதிகாரிகள் ஆணையர் வேலவன் தினகரன் சுரேஷ் மற்றும் சேர்மன் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். 

இந்த நிகழ்ச்சியினை பேரணாம்பட்டு நகராட்சி ஆணையர் வேலவன் தொடங்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் சாலையோர வியாபாரிகளுக்கு 217 நபர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல் 217 வியாபாரிகளுக்கு சான்று வழங்குதல் வியாபாரிகளுக்கு நகராட்சி கடன் அனுமதி இளநிலை பொறியாளர் திட்டம் மற்றும் ஆணையரின் அங்கீகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பித்தல் வங்கி மேலாளரிடம் ஆலோசித்தல் 150 புதிய சாலை ஓர வியாபாரிகளை சேர்த்தல் உள்ளிட்ட பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது 

பிறகு இந்த நிகழ்ச்சியில் வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கினர் பின்னர் வியாபாரிகளுக்கு சான்றிதழையும் வழங்கி சிறந்த முறையில் வியாபாரம் செய்து இந்த தொகையை கொஞ்சம் கொஞ்சமாக வங்கியில் செலுத்தினால் பிறகு இதைவிட அதிகமாக வங்கியில் கடன் பெறலாம் என்பதை தெரிவித்தனர் 

இந்த சிறு நகராட்சியில் இத்தகைய நிகழ்ச்சி நடைபெற்றது மக்கள் மனதில் மிகவும் வரவேற்பை பெற்றுள்ளது இதைப்போல் அனைத்து நகராட்சி மாநகராட்சிகளும் நடைபெற்று தெரு ஓர வியாபாரிகளுக்கு பலன் தரும் வகையாக வங்கி கடனை பெற்றுத் தர வேண்டும் என்பதும் இப்பகுதி மக்கள் கோரிக்கையாக உள்ளது.

No comments

Thank you for your comments