பட்டாபிராம் போக்குவரத்து காவல்துறை சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
பட்டாபிராம் போக்குவரத்து காவல்துறை சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
திருவள்ளூர் மாவட்டம் சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த பட்டாபிராம் போக்குவரத்து காவல்துறை சார்பாக சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணியை பட்டாபிராம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த பேரணியில், தனியார் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சாலை விபத்துகளை முற்றிலும் தவிர்க்கும் விதத்தில் பல்வேறு வாசகங்கள் கொண்ட விழிப்புணர்வு பாதகையை கையில் ஏந்தி பட்டாபிராம் இருந்து இந்து கல்லூரி வரை விழிப்புணர்வு வாசகங்களை சொல்லிக்கொண்டு 4 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலையில் நடந்தே சென்று பட்டாபிராம் காவல் நிலையம் அருகே இருசக்கர வாகன ஓட்டிகள் சரியான முறையில் தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு, பூச்செண்டு கொடுத்தும் தலைக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக தலைக்கவசம் கொடுத்தும் நான்கு சக்கர வாகனங்களில் சீட் பெல்ட் அணிந்து வந்தவர்களுக்கும் விழிப்புணர்வு ஊக்குவிக்கும் விதமாக மாணவ மாணவிகள் ரோஜா பூ கொடுத்து இனிப்புகளும் வழங்கினர்
இந்நிகழ்ச்சியில் பட்டாபிராம் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்கள் குணசேகரன் ரகுபதி மற்றும் சக காவலர்கள் மற்றும் ஆவடி பல்லுயிர் பாதுகாப்பு பாதுகாப்பு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் திரு ஜே ரீகன் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் உடனிருந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர் இதனால் வாகன ஓட்டிகள் நன்றி தெரிவித்தனர்
No comments
Thank you for your comments