தொழில்துறைகளின் வளர்ச்சிக்கு உதவிடும் வகையில் ஆலோசனைக் கூட்டம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், CII (இந்திய தொழில்துறை கூட்டமைப்பு நிறுவனம்) சார்பாக மாவட்டத்தில் உள்ள தொழில்துறைகளின் வளர்ச்சிக்கு உதவிடும் வகையில் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (17.08.2023) நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், தொழில்துறைக்கான திறன், போட்டி திறன் மற்றும் வணிக வாய்ப்புகளை மேம்படுத்துதல் மூலம் இந்தியாவின் வளர்ச்சி பயணத்தை வடிவமைப்பதிலும் தொழில்துறையின் ஈடுபாட்டை மாற்றுவதில் முனைப்புடனும் செயல்பட்டு வரும் இந்திய தொழில்துறை கூட்டமைப்பு நிறுவனம் சார்பாக மாவட்டத்தில் உள்ள தொழில் துறைகளின் வளர்ச்சிக்கு உதவிடும் வகையிலும் தொழில்துறையில் தொடர்ச்சியான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு ஏதுவாக தொழில் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பல்வேறு தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் உடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இவ் ஆலோசனைக் கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.சுதாகர், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் வா.ச.வெங்கடேசன், சிஐஐ மற்றும் சென்னை மண்டலம் நிர்வாக இயக்குநர் ஏ.ஆர்.உன்னிகிருஷ்ணன், துணைத் தலைவர் திரு.மிலன் வாஹி, தொழில் முனைவோர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments