அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கல்
காஞ்சிபுரத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு, நடைபெற்ற முகாமில் இன்று (17.08.2023) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் மாணவியர்களுக்கு தேசிய குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கினார்கள்.
தேசிய குடற்புழு நீக்க நாள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டது. இதன்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து 1 முதல் 19 வயது வரை உள்ள 3,33,481 குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கு, 20 முதல் 30 வயது வரை உள்ள 76,313 பெண்களுக்கு அல்பென்டசோல் என்ற சப்பி சாப்பிடும் மாத்திரை வழங்கப்பட உள்ளது.
இதன்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஆகிய அனைத்து இடங்களிலும் உள்ள மொத்த குழந்தைகள், மாணவர்கள் மற்றும் பெண்களுக்கு சுகாதார துறை, குழந்தை வளர்ச்சி துறை, சமூக வளர்ச்சி துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறை பணியாளர்கள் மூலம் அளிக்கப்பட உள்ளது. விடுபட்ட குழந்தைகள், மாணவர்கள் மற்றும் பெண்களுக்கு வரும் 24.08.2023 அன்று அளிக்கப்பட உள்ளது.
இம்மாவட்டத்தில் உள்ள 1 முதல் 2 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கு தலா 1/2 (200 mg) மாத்திரை மற்றும் 2 முதல் 30 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகள், மாணவர்கள் மற்றும் பெண்களுக்கு தலா 1 (400 mg) மாத்திரை அளிக்கப்படும். இதன் மூலம் ஒட்டு மொத்த குடற்புழுக்களை நீக்கி குழந்தைகள் ஆரோக்கியத்தை பேணிக்காக்க மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களும் தகுந்த ஒத்துழைப்பு நல்கி அனைவரும் மேற்கண்ட நாளில் குடற்புழு மாத்திரைகளை உட்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு.பிரியாராஜ், பள்ளி அசிரியர்கள் கலந்து கொண்டனர்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments