Breaking News

சுற்றித்திரிந்த கால்நடைகளை பிடித்து கோசாலைகளுக்கு அனுப்பி வைப்பு..

காஞ்சிபுரம்

  • சாலையில் சுற்றித்திரிந்த கால்நடைகளை காலையிலேயே சென்று சுற்றி வளைத்து பிடித்த காஞ்சிபுரம் மாநகராட்சி ஊழியர்கள்.
  • பிடிக்கப்பட்ட கால்நடைகளை லாரியில் ஏற்று கோசலைக்கு அனுப்பி வைத்தனர்.

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் பள்ளிக்குச் சென்ற சிறுமியை சாலையில் சுற்றித்திரிந்த கால்நடை முட்டி மோதி படுகாயப்படுத்தியது இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.


அதன்படி காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட முக்கிய சாலைகளில் ஏராளமான கால்நடைகள் சுற்றித் திரிவதாக தொடர் புகார்கள் வந்தது.

இதனைத் தொடர்ந்து கால்நடைகளை பிடிக்க வருவாய்த்துறை காவல்துறை, கால்நடைத்துறை, சமூக ஆர்வலர்கள் மாநகராட்சி அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழுவினர் தலைமையில் காலை நேரத்திலேயே காஞ்சிபுரத்தின் ரயில்வே சாலை திருகாளிமேடு சாலை உள்ளிட்ட பகுதிகளில் காஞ்சிபுரம் மாநகராட்சி ஊழியர்கள் களத்தில் இறங்கி சாலையில் சுற்றித்திரிந்த கால்நடை களை கயிறு கட்டி பிடித்தனர்.

கால்நடை மருத்துவத்துறையினர் பரிசோதனை செய்து சான்று வழங்கியதை தொடர்ந்து பிடிபட்ட கால்நடைகள் லாரிகளில் ஏற்றி கோசாலைகளுக்கு அனுப்பி வைக்கும் பணியினை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டனர்.

மாநகராட்சி ஊழியர்கள் காலையிலேயே சாலையில் சுற்றித்திரிந்த கால்நடைகளைப் பிடித்துச் சென்ற காட்சியைப் பார்க்க பொதுமக்கள் அனைவரும் ஆட்சியில் நிர்வாகத்தின் செயலை பாராட்டினர்கள்.

No comments

Thank you for your comments