Breaking News

குடிபோதையில் மனைவி வெட்டி படுகொலை செய்த கணவன்

காஞ்சிபுரம்


செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில், கருநீலம் கிராமத்தைச் சேர்ந்தவர் புருஷோத்தமன் (வயது 32), கட்டிடத் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.

 புருஷோத்தமன், காஞ்சிபுரம் மாவட்டம் ஆர்ப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த முனியம்மா என்பவரை திருமணம் செய்து கொண்டு மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.


புருஷோத்தமன் குடி போதைக்கு அடிமையாகி மனைவி குழந்தைகளை துன்புறுத்திய நிலையில் முனியம்மா குழந்தைகளுடன் ஆர்ப்பாக்கம் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்துவிட்டார்.

குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வரும் முனியம்மாவிடம் அடிக்கடி குடித்துவிட்டு  வந்து புருஷோத்தமன் தகராறு செய்துவிட்டு செல்வதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று குடித்துவிட்டு வந்த புருஷோத்தமன் மனைவி முனியம்மாவிடம் தகராறில் ஈடுபட்டு உள்ளார்.

தகராறு முற்றிய நிலையில் அருகில் இருந்த டேபிள் ஃபேனின் ஒயரை முனியம்மாவின் கழுத்தை இறுக்கி விட்டு கத்தியால் சரம் மாறியாக வெட்டி கொலை செய்துள்ளார்.

கொலை செய்துவிட்டு வீட்டின் கதவை மூடிக்கொண்டு தப்பி ஓடிய நிலையில்,இதனை பார்த்து சந்தேகமடைந்த கிராம மக்கள் புருஷோத்தமனை துரத்திச் சென்று பிடித்து உள்ளனர்.

பின்னர் கொலை சம்பவம் குறித்து மாகரல் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த   மாகரல் போலீசார், பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த புருஷோத்தமனை கைது செய்தனர்.

test banner

மேலும் உயிரிழந்த முனியம்மாவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலைச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து மாகரல் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மூன்று சிறிய குழந்தைகள் உள்ள நிலையில் குடிபோதையில் மனைவியை கணவன் வெட்டி கொலை செய்த சம்பவம் ஆர்ப்பாக்கம் கிராமத்தில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

No comments

Thank you for your comments