பாஜக சார்பில் இன்று தேசப்பிரிவினை கொடுமைகள் நினைவு நாள் அமைதிப் பேரணி
- காஞ்சிபுரத்தில் அனுமதி இன்றி தேசப்பிரிவினை கொடுமைகள் நினைவு நாள் அமைதிப் பேரணி நடத்திய 100க்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது.
- தடையை மீறி பேரணி செல்ல முயன்ற பாஜகவினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு.
தமிழ்நாடு முழுவதும் பாஜக சார்பில் இன்று தேசப்பிரிவினை கொடுமைகள் நினைவு நாள் அமைதிப் பேரணி நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் தேசப்பிரிவினை கொடுமைகள் நினைவு நாள் பேரணி காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே துவங்க இருந்தது.
இந்நிலையில் பேரணி செல்ல காவல்துறையினர் அனுமதி வழங்காத நிலையில் தடையை மீறி தேசியக் கொடியை ஏந்தி பேரணியாக செல்ல முயன்ற பாஜகவினருக்கும் போலீசாருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அனுமதி இன்றி பேரணி செல்ல முயன்ற பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
பாஜகவினர் பேரணியை ஒட்டி நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
No comments
Thank you for your comments