Breaking News

பெட்ரோல் நிரப்ப பணம் கேட்ட ஊழியருக்கு அரிவால் வெட்டு..

 காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் அருகே பெட்ரோல் பங்கில் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்ப பணம் கேட்ட ஊழியருக்கு அரிவால் வெட்டு. மருத்துவமனையில் அனுமதி.

இளைஞர் ஒருவர் கைது,  இருவர் தப்பி ஓட்டம்.

காஞ்சிபுரம் தாலுகா போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.


காஞ்சிபுரம் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வேடல் பகுதியில் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது.

இந்த பெட்ரோல் பங்கிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த 3 இளைஞர்கள் டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலம் பணம் அனுப்புவதாகவும்,மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போடுமாறு கூறியுள்ளனர்.

பெட்ரோல் பங்க் ஊழியர் தங்களுக்கு பணம் வந்த பிறகு மட்டுமே பெட்ரோல் நிரப்ப முடியும் என கூறியுள்ளனர்.

இதன் காரணமாக பெட்ரோல் நிரப்ப வந்த இளைஞர்களுக்கும், பெட்ரோல் பங்க் ஊழியர்களுக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில், மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பெட்ரோல் பங்க் ஊழியர் வெங்கட் என்பவரின் தலையில் வெட்டி விட்டு தப்பி ஓடி உள்ளனர்.

கத்தியால் வெட்டிவிட்டு தப்பி ஓடிய இளைஞர்களை பெட்ரோல் பங்க் ஊழியர்கள் துரத்திச் சென்று, மூன்று பேரில் ஒருவனை பிடித்தனர்.


மேலும் அறிவாளால் வெட்டுப்பட்ட பெட்ரோல் பங்க் ஊழியர் வெங்கட்டை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுக்கா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததின் பேரில் போலீசார் விரைந்து வந்து பெட்ரோல் பங்க் ஊழியர்கள் பிடித்து வைத்திருந்த இளைஞரை கைது செய்தனர்.

test banner

பின்னர் அவரிடம் நடத்திய விசாரணை வையாவூர் கிராமத்தைச் சேர்ந்த கோபி என்பதும், அவருடன் வையாவூரைச் சேர்ந்த ஸ்ரீராம், சிறுவாக்கத்தைச் சேர்ந்த ஜீவா ஆகிய மூவரும் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த தாலுக்கா போலீசார் தப்பி ஓடிய இளைஞர்கள் ஸ்ரீராம் மற்றும் ஜீவாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.

No comments

Thank you for your comments