முத்தீஸ்வரர் ஆலயத்தில் அனைத்து தோஷங்களும் நீக்கும் பிரதோஷ விழா
காஞ்சிபுரம் முத்தீஸ்வரர் ஆலயத்தில் அனைத்து தோஷங்களும் நீக்கும் பிரதோஷ விழா விமர்சையாக நடைபெற்றது.
காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு முத்தீஸ்வரர் ஆலயத்தில் அனைத்து தோஷங்களும் நீங்கிடும் பிரதோஷ விழா விமர்சையாக நடைபெற்றது
இதில் அலங்கரிக்கப்பட்ட பிரதோஷ பகவான் நந்தி வாகனத்தில் எழுந்தருளி ஆலய வளாகத்தில் வலம் வந்து பக்தருக்கு காட்சி அளித்தார் முன்னதாக மூலவர் முத்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் தூப தீப ஆராதனைகள் நடைபெற்றது
இதனை தொடர்ந்து பிரதோஷ பகவானுக்கு சிறப்பு தூப தீப ஆராதனைகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது இவ்விழாவில் ஆலய நிர்வாக குழு தலைவர் சரவணகுமார் உள்ளிட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments