ஆடி அமாவாசை ஒட்டி பிதுர் அன்னதானம் மற்றும் வஸ்திர தானம்
காஞ்சிபுரம் மேட்டு தெருவில் ஆடி அமாவாசை ஒட்டி பிதுர் அன்னதானம். மற்றும் வஸ்திர தானம் ஸ்ரீஅன்பு செழியன் தலைமையில் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மேட்டு தெரு அருகில்அமைந்துள்ள பாபுகான் தோட்டம் பகுதியில் அகஸ்திய கிருபா டிரஸ்ட் சார்பில் ஆடி அமாவாசை ஒட்டி பிதுர் அன்னதானம் மற்றும் வஸ்திர தானம். ஸ்ரீ அன்பு செழியன் தலைமையில் வழங்கப்பட்டது
இதில் நூற்றுக்கும் மேற்பட்டவர் கலந்து கொண்டனர்.இதில் 15 வகையான உணவுகள் 11 பிராமணர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு உணவளித்து வஸ்திரதானம் வழங்கப்பட்டது இதில் ஸ்ரீ அன்பு செழியன் கலந்து கொண்டு சிறப்பு பூஜைகள் செய்து பித்ருக்கள் சாந்தி அடையும் வண்ணம் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்யப்பட்டது.
இதில் காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு உணவு உண்டு வஸ்திரங்களை பெற்று சென்றனர்.
மேலும் வரும் அம்மாவாசை தினங்களிலும் சிறப்பு பாராயணங்கள் நடைபெற்று அன்னதானம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது
No comments
Thank you for your comments