Breaking News

சிறப்பு கிராமசபை கூட்டத்தில் 100 வயது கடந்த மூதாட்டிகளுக்கு புதிய ரூ.100 நோட்டிகளால் மாலை அணிவித்து உற்சாகம்

காஞ்சிபுரம் : 

சுதந்திர தினவிழா சிறப்பு கிராமசபை கூட்டத்தில் கருப்படி தட்டடை ஊராட்சியை சேர்ந்த 100 வயது கடந்த மூதாட்டிகளுக்கு புதிய ரூ.100 நோட்டிகளால் மாலை அணிவித்த ஊராட்சி மன்ற தலைவர்  ரூ.100 புதிய நோட்டு மாலையை கண்டதும் மூதாட்டி உற்சாகத்தில் சாமி ஆடியது போலும் உணர்ச்சிவசப்பட்டு கத்திய செயல் நெகழ்ச்சியை ஏற்படுத்தியது


காஞ்சிபுரம் மாவட்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கருப்படிதட்டடை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பொன்னா. வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற  சுதந்திர தின சிறப்பு கிராம சபை கூட்டம் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு நடைபெற்றன.

இக்கூட்டத்தில் கருப்படிதட்டடை ஊராட்சியில் உள்ள 100 வயதை கடந்த  பார்வதி ஜெலநாதன், சரோஜா கன்னியப்பன் ஆகிய இரு மூதாட்டிகளுக்கு புத்தாடை வழங்கி சிறப்பு செய்து சால்வை, பூமாலை அணிவித்ததுடன் அவர்களை மேலும் கௌரவிக்கும் வண்ணம் புதிய ரூ.100 நோட்டுகள் கொண்ட மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வாழ்த்து பெற்றனர்.

ரூ.100 புதிய நோட்டு மாலையை கண்டதும் மூதாட்டி ஒருவர் சாமி ஆடுது போல் மெய்சிலிர்த்து ஆட்டம் ஆடியும், மாலை அணிவித்ததும் உணர்ச்சிவசப்பட்டு கத்தியதும் காண்போரை நெகிழ செய்தது.

மேலும் இக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஆண்கள் பெண்கள் அனைவரும் நூற்றாண்டை கடந்த முதியவர்களிடம் மலர் தூவி ஆசி பெற்றனர்.

மேலும் ஊராட்சி மன்றத்தை சேர்ந்த உறுப்பினர்கள் மூதாட்டிகள் உடன் புகைப்படம் எடுத்துக் கொண்டோம் ஊர் பொதுமக்களும் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சத்யா, ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், அரசு மருத்துவ செவிலியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments