Breaking News

பேரறிஞர் அண்ணா பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் கலைஞர் நினைவு நாள் அமைதிப் பேரணி.

பேரறிஞர் அண்ணா பிறந்த ஊரான  காஞ்சிபுரத்தில் கலைஞர் நினைவு நாள் அமைதிப் பேரணி காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க சுந்தர் எம் எல் ஏ தலைமையில் நடைபெற்றது.


தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவு நாள் தமிழகம் முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது.

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாநகராட்சி, ஒன்றியம், பேரூராட்சி, ஊராட்சி, வார்டு,என அனைத்து பகுதிகளிலும் கலைஞரின் நினைவு நாளை அனுசரிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அதன்படி பேரறிஞர் அண்ணா பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில்,காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக,மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமையில் காஞ்சிபுரம்  எம்பி.க.செல்வம், எம்எல்ஏ சிவிஎம்பி எழிலரசன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் தொண்டர்களும் என 500க்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்து கொண்டு காஞ்சிபுரம் காந்தி சாலை பெரியார் தூண் அருகில் இருந்து சின்ன காஞ்சிபுரம் திருக்கச்சி நம்பி தெரு திமுக மாவட்ட அலுவலகம் வரை அமைதியாக பேரணி சென்றனர்.





பின்னர் மாவட்ட அலுவலகத்தில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.



No comments

Thank you for your comments