Breaking News

ஸ்ரீ மூலஸ்தம்மன் ஆலயம் ஆடி மாத திருவிழாவை ஒட்டி 28 கைகளுடன் 3 டன் சிம்லா ஆப்பிள் அலங்காரம்


காஞ்சிபுரம் அடுத்த முத்தியால்பேட்டை பகுதியில் உள்ள ஸ்ரீ மூலஸ்தம்மன் ஆலயம் கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாத திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

இந்தாண்டு 23ம் ஆண்டு ஆடி மாத  திருவிழாவை ஒட்டி ஸ்ரீ மூலஸ்தம்மன் ஆலயம் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனையும் நடைபெற்றது.

இரவு திருவீதி உலாவிற்கு சிம்லாவில் இருந்து ரயில் மூலம் கொண்டுவரபட்ட 3 டன் எடையுள்ள 3000 ஆப்பிள் பழத்தில் 20 அடி மாலையும், தோரணமாக தொங்கவிட்டபடி சிறப்பு அலங்காரத்தில்   ஶ்ரீ மூலஸ்தம்மன் அம்மன் திருக்கோவிலில் 28 கைகளுடன்  பல்வேறு மலர் மாலைகளில் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்த பின் சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

திருவீதி விழாவின் முன்பு 30 நிமிடம் தொடர் வானவேடிக்கையுடன், பேண்ட் வாதியங்களுடன் ஸ்ரீமூலஸ்தம்மன்  கோலாகலமாக திருவீதி உலா நடைபெற்றது. திருவீதி உலாவில் பல்வேறு தெரு வழியாக வளம் வந்து வழியெங்கும் பக்தர்கள் தீபாராதனை செய்து வழிபட்டு அம்மன் அருள் பெற்றனர்.



No comments

Thank you for your comments