Breaking News

மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் ”மாபெரும் தமிழ்க் கனவு” தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி

காஞ்சிபுரம் மாவட்டத்தில், தமிழ் இணைய கல்வி கழகம் சார்பில், கல்லூரி மாணவ மாணவிகளுக்கான மூன்றாவது கட்டமாக நடைபெற்ற,”மாபெரும் தமிழ்க் கனவு” தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்கள்.




காஞ்சிபுரம் மாவட்டம், மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் இன்று (17.08.2023) தமிழ் மரபின் வளமையையும், பண்பாட்டின் செழுமையையும், சமூக சமத்துவத்தையும் பொருளாதார மேம்பாட்டுக்கான வாய்ப்புகளையும், காலம் தோறும் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்த புரிதலையும், வளரும் தலைமுறையினருக்கு முழுமையாக கொண்டு சென்று சேர்ப்பதற்கு ”மாபெரும் தமிழ்க் கனவு”  தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சியை  மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன்,  இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்து உரையாற்றியதாவது:

தமிழ் மரபின் வளமையையும், பண்பாட்டின் பெருமையையும், சமூக விழிப்புணர்வையும், பொருளாதார முன்னேற்றம் குறித்த வாய்ப்புகளையும் இளம் தலைமுறையினருக்கு குறிப்பாகக் கல்லூரி மாணவர்களிடத்தில் முழுமையாகக் கொண்டு சென்று சேர்ப்பதற்கு, இந்த பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதன் மூலம் அவர்கள் தாங்கள் உணர்ந்ததை அடுத்து வரும் சந்ததியினருக்கு கொண்டு செல்ல முடியும், இதனால் விழிப்புணர்வுள்ள சமூகம் உருவாகும்.

நமது பண்பாட்டின் பெருமையை இளைய தலைமுறைக்கு, குறிப்பாகக் கல்லூரி மாணவர்களுக்கு உணர்த்துவதென்பது ஆரோக்கியமான எதிர்காலச் சமூக காலக் கட்டமைப்பின் ஒரு முக்கியமான பகுதியாகும். எனவே, தமிழ்நாடு முழுவதும் உள்ள 100 கல்லூரிகளில் தமிழர் மரபும்-நாகரிகமும், சமூக நீதி, பெண்கள் மேம்பாடு, சமூக பொருளாதார முன்னேற்றம், மொழி மற்றும் இலக்கியம், கலை மற்றும் பண்பாடு, தொல்லியல் ஆய்வுகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, தொழில் முனைவுக்கான முன்னெடுப்புகள் மற்றும் வாய்ப்புகள், கல்விப்புரட்சி மற்றும் அரசின் திட்டங்கள் மற்றும் அதனைச் செயல்படுத்தும் முறைகள் ஆகிய தலைப்புகளில் கீழ் சிறந்த சொற்பொழிவாளர் கொண்டு மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி நடைத்தப்பட்டு வருகிறது. 

இன்று இந்த மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சியில்  திரைப்பட இயக்குநர் திரு.ராஜு முருகன்  அவர்கள் ”யாதும் ஊரே யாதும் கேளீர்” என்ற தலைப்பில் மாணவர்களிடம் உரையாற்றுகிறார். எனவே இந்நிகழ்ச்சியில் உரையாற்ற உள்ள சிறப்பு சொற்பொழிவாளர் உரைகளைக் கேட்டு, நீங்கள் மட்டும் பயனடைவதோடு மட்டுமில்லாமல் சக மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் கொண்டு சேர்த்திடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்கள்.

இதனை தொடர்ந்து திரைப்பட இயக்குநர் திரு.ராஜு முருகன்  அவர்கள் ”யாதும் ஊரே யாதும் கேளீர்” என்ற தலைப்பில் மாணவர்களிடம் உரையாற்றி,  மாணவ/மாணவியர்களிடம் கலந்துரையாடினார். 

மேலும் இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ள மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி புத்தகமும், தமிழ்ப் பெருமிதம் குறித்த குறிப்பேடும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் புத்தகக்காட்சி, நான் முதல்வன், புதுமைப்பெண், கல்விக் கடன், தொழில் முனைவோருக்கான அரசுத் திட்டங்கள், வங்கிக்கடன் வாய்ப்புகள், மகளிர் சுய உதவிக்குழுப் பொருட்கள் விற்பனை,  சிறுதானியம் குறித்த முக்கியத்துவம் அடங்கிய பல்வேறு அரங்குகளையும்,  மாபெரும் தமிழ்க் கனவு குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் உருவாக்கப்பட்ட காணொலியையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்கள். மேலும் நிகழ்ச்சியில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ/மாணவியர்களுக்கு  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி.க.சங்கீதா,  இ.ஆ.ப., மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் / ”மாபெரும் தமிழ்க் கனவு”  தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு.சு.சீனிவாசன், முதன்மை கல்வி அலுவலர் திருமதி.வெ.வெற்றிச்செல்வி, கல்லூரி பேராசிரியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் கல்லூரி மாணவ/ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments