Breaking News

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில்  நடைபெற்றது.  இக்கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கினார். 


மாவட்ட அவைத்தலைவர் இனிய அரசு, மாவட்ட துணை செயலாளர் கோகுலகண்ணன், மலர்விழி, மாவட்ட பொருளாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வைத்தனர். 

கூட்டத்தில் முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழா மற்றும் கட்சியின் ஆக்கபணிகள் குறித்து விவாதிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து கூட்டத்தில் முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளை நடத்தி நலத்திட்ட உதவிகளை வழங்கிட வேண்டும், 

மகளிர் உரிமை திட்டத்தின் மூலம் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் தேர்தல் வாக்குறுதியை பேரறிஞர் அண்ணா பிறந்த செப்டம்பர் 15 அன்று அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் என்ற பெயரில் கலைஞர் நூற்றாண்டு விழாவில் செயல்படுத்துவதற்கு காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேபோல் வரும் ஆகஸ்ட்  19 அன்று இளைஞர்களின் எழுச்சி நாயகன் திமுக இளைஞரணி செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் கலைஞர் நூற்றாண்டு இந்நிகழ்ச்சிகள் மற்றும் காஞ்சிபுரம், மதுராந்தகம் பகுதிகளில் கொள்கை திருவிழாவாக கொண்டாடப்படுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

இந்த கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், உட்பட தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், இளைஞர் அணி நிர்வாகிகள், மாநகர, நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள் மாநில, மாவட்ட திமுக அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.







No comments

Thank you for your comments