ஆடிக்கிருத்திகை பண்டிகையை முன்னிட்டு திருத்தணிக்கு கூடுதலாக 300 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு
இதுகுறித்து, மாவட்டஆட்சித் தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல் தெரிவித்துள்ளதாவது,
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்(வி)லிட்., காஞ்சிபுரம் மண்டலம். 09.08.2023 அன்று ஆடிக்கிருத்திகை பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு 07.08.2023 முதல் 10.08.2023 வரை கீழ்கண்ட மார்கங்களிலிருந்து திருத்தணிக்கு கூடுதலாக 300 சிறப்பு பேருந்துகள் இயக்க காஞ்சிபுரம் போக்குவரத்துக் கழக மண்டலத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பயணிகளின் அடர்வுக்கு ஏற்ப கூடுதல் பேருந்து இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப.. அவர்கள் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் – திருத்தணி | 100 |
அரக்கோணம் – திருத்தணி | 25 |
சென்னை – திருத்தணி | 100 |
திருப்பதி - திருத்தணி | 75 |
மொத்தம் | 300 |
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments