அதிமுக மாநாட்டிற்கு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்து இருசக்கர வாகன பேரணி
மதுரை விமான நிலையம் அருகில் வலையங்குளத்தில் வரும் 20-ம் தேதி அதிமுக மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டுக்கு அதிமுக தொண்டர்கள் மட்டுமில்லாது பொதுமக்களையும் அதிமுகவினர் அழைத்து வருகிறார்கள். இந்த மாநாட்டை பிரபலப்படுத்த வாகனப் பிரச்சாரம், சைக்கிள் பேரணி போன்ற பல்வேறு ஏற்பாடுகளை அதிமுகவினர் செய்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாநகரில் காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் தலைமையில் காஞ்சிபுரம் தேரடி அருகே அதிமுக மாநாடு இருசக்கர வாகன பேரணி நடந்தது. இந்தப் பேரணியை முன்னாள் அமைச்சர் வி. சோமசுந்தரம் தொடங்கி வைத்தார்.
இந்த இரு சக்கர வாகன பேரணியானது தேரடியில் தொடங்கி காந்தி சாலை வழியாக கீரை மண்டபம், பிள்ளையார் பாளையம், பேருந்து நிலையம், நான்கு ராஜா வீதி மூங்கில் மண்டப வழியாக வலம் வந்து தேரடியில் முடித்தனர். சுமார் 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் இருசக்கர வாகனத்தில் வலம் வந்து பொதுமக்களை அதிமுக மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர்.
No comments
Thank you for your comments