லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளர் கைது
- உத்திரமேரூர் அருகே நிலத்திற்கு பட்டா மாற்றி தரவும் நில உட்பிரிவு செய்து தரவும் ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளர் கைது.
- காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடவடிக்கை.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த அரும்புலியூரில் கிராம நிர்வாக அலுவலகம் செயல்பட்டு வருகிறது கிராம நிர்வாக அலுவலராக மாரியப்பன் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் தாலுக்கா பினாயூர் கிராமத்தை சேர்ந்த குமார் என்பவர் தனது 50 சென்ட் நிலத்தை பட்டா மாற்றி தரவும் நில உட்பிரிவு செய்து தரவும் கிராம நிர்வாக அலுவலரை அணுகியுள்ளார்.
பினாயூர் கிராம நிர்வாக அலுவலர் விடுமுறையில் உள்ளதால் அரும்புலியூர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வரும் மாரியப்பன் பினாயூர் (பொறுப்பு விஏஓ வாக) செயல்பட்டு வருகிறார்.
குமாரிடம் பட்டா மற்றும் நில உட்பிரிவு செய்து தர வேண்டும் என்றால் ஐந்தாயிரம் ரூபாய் கொடுக்குமாறு கிராம நிர்வாக அலுவலர் மாரியப்பன் கூறியுள்ளார்.
இதனையடுத்து லஞ்சம் கொடுக்க மறுத்த குமார் இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் மாரியப்பன் மீது காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையிடம் புகார் தெரிவித்தார்.
புகாரின் பேரில் அரும்புலியூர் கிராம நிர்வாக அலுவலகம் அருகே மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கிராம நிர்வாக உதவியாளர் கவியரசன் ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கும் போது விஏஓ மாரியப்பன் உட்பட இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர்.
மேலும் கிராம நிர்வாக அலுவலர் மாரியப்பன் மற்றும் உதவியாளர் கவியரசன் ஆகியோரை கைது செய்து லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கலைச்செல்வன் தலைவிலான காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments
Thank you for your comments