Breaking News

பள்ளி செல்லா / இடைநின்ற மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் குறித்த கணக்கெடுப்புக்கான முன்திட்டமிடல் கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் , ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில், 2023-24 ஆம் கல்வியாண்டில் பள்ளி  செல்லா  / இடைநின்ற  மற்றும்  மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் குறித்த கணக்கெடுப்புக்கான முன்திட்டமிடல் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன்படி 6 முதல் 18 வயதுடைய அனைத்து குழந்தைகளையும் முறையான பள்ளியில் சேர்த்து கல்வி வழங்க வேண்டும். அதன்படி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி / ஊராட்சி / பேரூராட்சிகளின் குடியிருப்புகளிலும் பள்ளி செல்லா / இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் புலம் பெயர்ந்த வந்த தொழிலாளர்களின் குழந்தைகள் குறித்த கணக்கெடுப்புப் பணி ஆகஸ்ட் 2023 முதல் நடைபெற்று வருகிறது.  

இக்கணக்கெடுப்புக்கான முன்திட்டமிடல் கூட்டம்,  மாவட்ட அலுவலர்களுக்கு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 

இக்கணக்கெடுப்பு ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பு ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள்/ கல்வி தன்னார்வலர்கள்/ சிறப்பு பயிற்றுநர்கள்/ இயன்முறை பயிற்சியாளர்கள் / பயிற்சி மைய பாதுகாவலர்கள் மற்றும் பிற துறை அலுவலர்கள், ஆகியோர்களை கொண்டு கணக்கெடுப்பு பணி நடைபெறவுள்ளது. எனவே இக்கணக்கெடுப்புப் பணிக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு  அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். 

மேலும் பொதுமக்கள் எவரேனும் பள்ளி செல்லா / இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் குறித்த விவரங்களை Mail ID-dpckanchi@yahoo.co.in அல்லது 1098 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்  தெரிவித்தார்கள்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments