Breaking News

அரசு மருத்துவமனையில் தாயைப் பார்க்க வந்த இரு குழந்தைகள் மாயம்..!

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட தனது தாயைப் பார்க்க வந்த இரு குழந்தைகள் மாயமானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டத்தை சேர்ந்த ஆதரவுபாக்கம் கிராம இருளர் காலனி பகுதியை சேர்ந்த மூர்த்தி மற்றும் ஏழுமலை இருவரும் சகோதரர்கள் ஆவர்.

மூர்த்தியின் மனைவி காமாட்சியை தனது இரண்டாவது பிரசவத்திற்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் காமாட்சியை பார்ப்பதற்காக மூர்த்தி தனது மகன் சக்திவேல் உடனும்,  ஏழுமலை தனது மகள் சௌந்தர்யா,  மனைவி குள்ளம்மாளுடன் நேற்று மாலை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு வந்து உள்ளனர்.

நேற்று மாலை 7 மணி அளவில் காஞ்சிபுரத்தில் திடீர் கன மழை பெய்த நிலையில் மூர்த்தியும் ஏழுமலையும் தேநீர் அருந்த அருகில் உள்ள கடைக்கு செல்லும் நிலையில் திரும்பி வந்து பார்த்தபோது தங்களது குழந்தைகளான சக்திவேல் சவுந்தர்யாவை காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்து மருத்துவமனை வளாகத்தில்  இரவு முழுவதும் தேடி உள்ளனர்.

இதுகுறித்து மருத்துவமனை காவல்துறையிடம் எந்த தகவலும் தெரிவிக்காத நிலையில் , இன்று காலை இதுகுறித்து காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.

இவர்கள் தங்கி இருந்த மருத்துவமனை பகுதியில் எந்த ஓரு சிசிடிவி கேமரா அமைப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் குழந்தைகளை அழைத்து சென்ற நபர்கள் குறித்து தெரியவில்லை.

மேலும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சில மாதங்களுக்கு முன்பு சிசிடிவி அறையில் ஏற்பட்ட தீ விபத்துக்கு பிறகு இந்த சாதனங்கள் உபயோகத்தில் உள்ளதா என்பதும் கேள்விக்குறியான நிலையில் உள்ளது.

இதுகுறித்து பெற்றோர்களிடம் கேட்டபோது முன்னுக்கு பிரதான பதில்கள் கிடைக்கிறது.

ஆறு வயது மற்றும் மூன்று வயது குழந்தைகள் மருத்துவமனை வளாகத்தில் காணாமல் போனதா அல்லது அவரது பெற்றோர்கள் அழைத்து சென்ற இடத்தில் எங்கேயாவது காணாமல் போனதா என பெரும் ஐயம் நிலவிவரும் நிலையில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து காவல்துறையிடம் கேட்டபோது,  பெற்றோர்களிடம் இதுவரை எந்த புகாரும் பெறப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

test banner

No comments

Thank you for your comments