காஞ்சிபுரம் சரக டிஐஜியாக ஆர்.பொன்னி பதவி ஏற்பு
காஞ்சிபுரம் சரக டிஐஜியாக ஆர்.பொன்னி இன்று பதவி ஏற்றுக்கொண்டார். அவரை காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு எஸ் பி பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
கடந்த நான்காம் தேதி தமிழக முதன்மை செயலாளர் அமுதா காவல்துறையின் உயர் அதிகாரிகள் 27 பேர் இடம் மாற்றம் குறித்து அறிவிப்பு வெளியிட்டார்.
இதில் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை துணைத் தலைவராக பணிபுரிந்து வந்த பகலவன் திருச்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு அந்த இடத்திற்கு மதுரையில் டிஐஜியாக பணிபுரிந்து வந்த ஆர்.பொன்னி.ஐ.பி.எஸ் இடமாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் இன்று காஞ்சிபுரத்தில் உள்ள காவல்துறை துணைத் தலைவர் அலுவலகத்தில் பதவி ஏற்க வந்த அவரை காஞ்சிபுரம் எஸ்பி சுதாகர், செங்கல்பட்டு எஸ்.பி சாய்பிரிநீத் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
அதன்பின் காவல்துறையின் மரியாதை ஏற்று அதன்பின் தனது அலுவலகத்தில் காஞ்சிபுரம் சரக டி ஐ ஜி யாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர் காவல் துறையின் பல்வேறு மாவட்டங்களிலும் உயர் பதவி பெற்று சிறப்பாக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
No comments
Thank you for your comments