Breaking News

பள்ளி கல்வி துறை சார்பில் பள்ளி மேலாண்மை குழு சார்பில் பயிற்சி முகாம்

காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி துறை சார்பில் பள்ளி மேலாண்மை குழு சார்பில் பயிற்சி முகாம் நடைபெற்றது.  


காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி காஞ்சிபுரம் ஒன்றிய நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பள்ளி மேலாண்மை குழு சார்பில் சிறப்பு  பயிற்சி முகாம் நடைபெற்றது. 

பயிற்சியில் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், துணை மேயர் குமரகுருநாதன் ஆகியோர் முன்னிலையிலும் முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி தலைமையில் மாவட்ட உதவி திட்ட அலுவலர் தனசேகரன் சிறப்புரையாற்றினார் 

இதில் மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர் ஆசிரியர் பயிற்றுநராக அப்பன் ராஜ் மற்றும் ஞான சௌந்தரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


மேற்பார்வையாளர் குளோரி எப்சிபா நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார் இதில் மாமன்ற உறுப்பினர்கள் பல்வேறு சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல் முறையாக இக்கூட்டம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

test banner

No comments

Thank you for your comments