Breaking News

காணாமல் போன குழந்தைகள் குறித்து தகவல் தெரிவிக்க காவல் துறை வேண்டுகோள்

பெண் மற்றும் ஆண் குழந்தைகள் காணாமல் போனது சம்மந்தமாக காஞ்சிபுரம் மாவட்டம், விஷ்ணுகாஞ்சி நிலைய எல்லைக்குட்பட்ட காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் 06.08.2023 அன்று ஏழுமலை (60) த/பெ.மாணிக்கம், வெங்கச்சேரி கிராமம், உத்திரமேரூர் தாலுக்கா என்பவரின் தம்பியான மூர்த்தி(40) என்பவர் அவரது மனைவி காமாட்சியின் இரண்டாவது குழந்தை பிரசவத்திற்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். 

இந்நிலையில் 07.08.2023 அன்று ஏழுமலை காமாட்சியை பார்ப்பதற்காக அவரது மனைவி குள்ளம்மாள், மகள் சௌந்தர்யா(07) மற்றும் மூர்த்தியின் மகன் சக்திவேல்(03) ஆகியோருடன் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு வந்து பார்த்துவிட்டு பிரசவ வார்டுக்கு அருகிலேயே தங்கியுள்ளனர். 

இந்நிலையில் 08.08.2023 அன்று 21.00 மணியளவில் ஏழுமலையின் மகள் சௌந்தர்யா மற்றும் அவரது சகோதரரின் மகன் சக்திவேல் ஆகியோரை மேற்படி இடத்திலிருந்து காணவில்லை. இது சம்மந்தமாக விஷ்ணுகாஞ்சி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி வழக்கில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர், அவர்களின் உத்தரவின்பேரில் மேற்படி காணாமல் போன இரண்டு குழந்தைகளை விரைந்து கண்டுபிடிக்க காஞ்சிபுரம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.ஜீலியஸ் சீசர் அவர்கள் தலைமையில் ஒன்பது தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வருகின்றனர்.


விசாரணையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் காணாமல் குழந்தைகளை அழைத்துச் செல்வது போல் சி.சி.டி.வி கேமராவில் காட்சிகள் பதிவாகி உள்ளது. அக்காட்சிகளை கொண்டு அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் இவர்களை பற்றிய விவரங்கள் தெரிந்தால் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இத்துடன் குழந்தைகளை அழைத்துச் சென்றவரின் புகைப்படம் மற்றும் குழந்தைகளின் புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது.

காவல் கட்டுப்பாட்டு அறை தொடர்பு எண் : 044-27236111, 9498181232

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 9498100260



test banner

No comments

Thank you for your comments