Breaking News

சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டம் அறிவிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஆகஸ்ட்-15 சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுகிறது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல் தெரிவித்துள்ளதாவது, 

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகின்ற சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ம் தேதி அன்று காலை 11.00 மணிக்கு  கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. கிராம சபைக் கூட்டங்களில் கீழ்க்காணும் பொருட்கள் குறித்து விவாதிக்கப்படும்.

கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம் மற்றும் திட்ட பணிகள்   குறித்து விவாதித்தல். கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்தல், இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல், அயோடின் கலந்த உப்பை உபயோகப்படுத்துதல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஜல்ஜீவன் இயக்கம், மகாத்மா காந்தி  தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), பிரதம மந்திரி ஊரகக் குடியிருப்பு திட்டம்,  மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு உரிமைகள் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் இதர பொருட்கள் தொடர்பாக கிராம சபை கூட்டத்தில் பகிர்ந்து கொண்டு விவாதிக்கப்படும்.

மேலும்,  கிராம ஊராட்சிகள்,  தங்களது ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட வரவு செலவு கணக்குகளை ஊராட்சி அலுவலகத்தின் தகவல் பலகையில் வெளிப்படுத்திட வேண்டும். பொதுமக்கள் பார்வையிட ஏதுவாக பிளக்ஸ் பேனர் மூலம் வரவு செலவு கணக்கு (படிவம் 30-ன் சுருக்கம்) வைக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

test banner

No comments

Thank you for your comments