அர்த்த மண்டபத்தில் புதியதாக பொருத்தப்பட்ட வெள்ளி கதவிற்கு கோவில் பட்டாச்சாரியார்கள் சிறப்பு பூஜை
காஞ்சிபுரம் 10-08-23
- காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் மூலவர் கருவறையில், துவாரக பாலகர்கள் நின்றருளும் அர்த்த மண்டபத்திற்கு புதிய வெள்ளிக் கதவு.
- பக்தர் குடும்பத்தினர் 32 கிலோ வெள்ளியால் செய்து வழங்கி கருவறையில் பெருத்தப்பட்ட கதவினை சிறப்பு பூஜைகள் செய்துதிறக்கப்பட்டது.
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான உலகப் பிரசித்தி பெற்ற அத்தி வரதர் கோவில் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திகிரி மலைமீது கோவில் கருவறை கொண்டு மூலவர் வரதராஜ சுவாமி பக்தர்களுக்குஅருள் பாலித்து வருகிறார்.
மூலவர் வரதராஜ பெருமாள் அருள் பாலித்து வரும் கருவறைக்கு வெளியே துவாரக பாலகர்கள் நின்றருளும் அர்த்த மண்டபத்திற்கு சென்னையை சேர்ந்த பக்தர் கிரிதர் குடும்பத்தினர் தங்களது வேண்டுதலின்படி வெள்ளிக் கதவு செய்து வழங்க கோவில் நிர்வாகத்திடம் அனுமதி பெற்றனர்.
அதன்படி சுமார் 35 லட்சம் ரூபாய் செலவில் பழமை மாறாமல் செய்யப்பட்ட 7 அடி உயரமும் 5 அடி அகலமும் கொண்ட மரக்கதவிற்கு பல்வேறு விதமான அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய 32 கிலோ எடை கொண்ட வெள்ளி தகடுகள் பதிக்கப்பட்ட புதிய கதவினை செய்து கோவில் கருவறை அர்த்த மண்டபத்தில் பொருத்தி நன்கொடையாக வழங்கினார்கள்.
கோவில் கருவறை அர்த்த மண்டபத்தில் புதியதாக பொருத்தப்பட்ட வெள்ளி கதவிற்கு கோவில் பட்டாச்சாரியார்கள் சிறப்பு பூஜை செய்து வெள்ளி கதவை திறந்து வைத்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
கோவில் கருவறை அர்த்த மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய வெள்ளிக் கதவினை திரளான பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து விட்டு, வரதராஜ பெருமாளை வணங்கி வழிபட்டு சென்றனர்.
No comments
Thank you for your comments