Breaking News

காலை உணவுத் திட்டத்தினை காஞ்சியில் தொடக்கம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், முதலமைச்சரின் காலை உணவுத்  திட்டமானது  நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் தொடங்கி வைக்கப்பட்டதை தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் பேரூராட்சிக்குட்பட்ட திருப்பெரும்புதூர் (மேற்கு) ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில்  திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.டி.ஆர்.பாலு, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., மற்றும் திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கு.செல்வப்பெருந்தகை ஆகியோர் முதலமைச்சரின் காலை உணவுத்  திட்டத்தினை  தொடங்கி வைத்தார்கள்.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், முதலமைச்சரின் காலை உணவுத்  திட்டமானது  இன்று (25.08.2023) நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் தொடங்கி வைக்கப்பட்டதை தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் பேரூராட்சிக்குட்பட்ட திருப்பெரும்புதூர் (மேற்கு) ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில்  திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.டி.ஆர்.பாலு, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., மற்றும் திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கு.செல்வப்பெருந்தகை ஆகியோர் முதலமைச்சரின் காலை உணவுத்  திட்டத்தினை  தொடங்கி வைத்து, மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 07.05.2022 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி எண்.110-ன் கீழ் தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழைக் குழந்தைகள்

  • பசியின்றி பள்ளிக்கு வருவதை உறுதி செய்யவும், படிப்பினை ஊக்குவிக்கவும்,
  • ஊட்டச்சத்து குறைபாட்டினை போக்கவும்,
  • ஊட்டச்சத்து நிலையை உயர்த்தவும்
  • பள்ளிகளில் குழந்தைகளின் வருகையை அதிகரிக்கவும் / தக்க வைக்கவும்
  • வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைக்கவும்
  • கற்றல் இடைநிற்றலைத் தவிர்க்கவும்,

அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு அனைத்து பள்ளி நாட்களிலும் காலை வேளையில் 5 நாட்களிலும் வெவ்வேறு வகையான சத்தான சிற்றுண்டி (உப்புமா / கிச்சடி / வெண்பொங்கல்) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, முதற்கட்டமாக 15.09.2022 அன்று இத்திட்டம் மதுரை மாநகராட்சி தொடக்கப் பள்ளியில்  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு 16.09.2022 அன்று முதல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 37 அரசு தொடக்கப் பள்ளிகளிலும் 3736 மாணவர்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது மாநகராட்சி / நகராட்சி / பேரூராட்சி ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு அனைத்து பள்ளி நாட்களிலும் காலை வேளையில் 5 நாட்களிலும் வெவ்வேறு வகையான சத்தான சிற்றுண்டி வழங்கிட ஆணையிடப்பட்டதை தொடர்ந்து, 25.08.2023 அன்று இத்திட்டம் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட அதே நேரத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட. ஊரக / ஊரக பகுதியை ஒட்டிய பேரூராட்சியில் அடங்கிய 438 பள்ளிகளிலும், மாங்காடு நகராட்சியில் 5 பள்ளிகளிலும்  மற்றும் குன்றத்தூர் நகராட்சியில்   4 பள்ளிகளிலும்  சென்னை பெருநகர மாநகராட்சியை ஒட்டியுள்ள 3 பள்ளிகளிலும் மொத்தம் 450 பள்ளிகளில் பயிலும் 28981 மாணவ/மாணவியர்கள் முதலமைச்சர் காலை உணவுத்திட்டம் வாயிலாக பயனடைவார்கள்.

இதில் ஊரக / ஊரக பகுதியை ஒட்டிய பேரூராட்சியில் அடங்கிய 438 பள்ளிகளில் உள்ள சமையற்கூடங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சமையல் பொறுப்பாளர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களை கொண்டு சமைத்து மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும். குன்றத்தூர் மற்றும் மாங்காடு நகராட்சியை சார்ந்த 9 பள்ளிகளிலும் மற்றும் சென்னை பெருநகர மாநகராட்சியினை ஒட்டியுள்ள 3 பள்ளிகளில் ஒருங்கிணைந்த சமையற்கூடங்களில் காலை சிற்றுண்டி சமைக்கப்பட்டு வாகனங்கள் வாயிலாக அந்தந்த பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு வழங்கப்படும்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலை சிற்றுண்டியானது  திங்கட்கிழமையில் ரவை உப்புமா, காய்கறி சாம்பாரும், செவ்வாய் கிழமையில்  கோதுமை ரவை கிச்சடி, காய்கறி சாம்பாரும்,  புதன் கிழமையில் வெண்பொங்கல், காய்கறி சாம்பாரும், வியாழக்கிழமையில் அரிசி உப்புமா, காய்கறி சாம்பாரும், வெள்ளிக்கிழமை  ரவை காய்கறி கிச்சடி காய்கறி சாம்பாரும் வழங்கப்படும்.

இந்நிகழ்ச்சியில் திருப்பெரும்புதூர்.ஒன்றியக் குழுத்தலைவர், திரு.எஸ்.டி.கருணாநிதி, திருப்பெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர், திரு.ஜ.சரவணக்கண்ணன், முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி. வெ. வெற்றிச்செல்வி,   மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,


...

No comments

Thank you for your comments