Breaking News

தோட்டக்கலைத்துறை சார்பில் பயனடைந்தவர்கள் முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி

காஞ்சிபுரம் மாவட்டத்தில், தோட்டக்கலைத்துறை சார்பில், பயனடைந்தவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்கள்.




மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, விவசாயிகளின் நலனை  கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2021-22  மற்றும்  22-23 ஆம் ஆண்டில் காஞ்சிபுரம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் 84 எக்டரில் பல்லாண்டு தோட்டக்கலைப்  பயிர்களும், திருப்பெரும்புதூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் 149 எக்டரில் பல்லாண்டு தோட்டக்கலைப்  பயிர்களும், உத்திரமேரூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் 172 எக்டரில் பல்லாண்டு தோட்டக்கலைப்  பயிர்களும் பயிடப்பட்டன. மேலும் காஞ்சிபுரம் வட்டத்திற்குட்பட்ட    பகுதிகளில்   1521  குடும்பங்களுக்கு     பழச்செடி    தொகுப்புகளும், 

திருப்பெரும்புதூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் 2770 குடும்பங்களுக்கு பழச்செடித் தொகுப்புகளும், உத்திரமேரூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் 3246 குடும்பங்களுக்கு பழச்செடி தொகுப்புகள் வழங்கப்பட்டன.

காஞ்சிபுரம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில்  வீட்டுத்தோட்டம் அமைக்க 2400 காய்கறி விதைத்தளைகளும், திருப்பெரும்புதூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில்  வீட்டுத்தோட்டம் அமைக்க 4350 காய்கறி விதைத்தளைகளும்,  உத்திரமேரூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் வீட்டுத்தோட்டம் அமைக்க 5075 காய்கறி விதைத்தளைகளும் வழங்கப்பட்டன. 

மேலும் காஞ்சிபுரம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் 51.7 எக்டர் பரப்பளவில் தோட்டக்கலை பயிர்சாகுபடிக்கான இடுபொருட்களும், திருப்பெரும்புதூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில்  94.3 எக்டர் பரப்பளவில் தோட்டக்கலை பயிர் சாகுபடிக்கான இடுபொருட்களும், உத்திரமேரூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் 112.6 எக்டர் பரப்பளவில் தோட்டக்கலை பயிர் சாகுபடிக்கான இடுபொருட்களும் வழங்கப்பட்டன, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2021-22  மற்றும்  22-23 ஆம் ஆண்டில் காஞ்சிபுரம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில்  149 விவசாயிகளுக்கு பிளாஸ்டிக் டிரம் மற்றும் கிரேடுகளும், திருப்பெரும்புதூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில்  256 விவசாயிகளுக்கு பிளாஸ்டிக் டிரம் மற்றும் கிரேடுகளும், உத்திரமேரூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில்  

255 விவசாயிகளுக்கு பிளாஸ்டிக் டிரம் மற்றும் கிரேடுகள் வழங்கப்பட்டன. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் மூலம் காஞ்சிபுரம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில்  3 காளான் வளர்ப்பு கூடமும்,  திருப்பெரும்புதூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில்  ஒரு காளான் வளர்ப்பு கூடமும் அமைக்கப்பட்டுள்ளது.

வாலாஜாபாத் வட்டம், வையாவூர் கிராமத்தை சார்ந்த திரு.முரளிகிருஷ்ணன்  என்பவர் கூறுகையில்:


என் பெயர் முரளிகிருஷ்ணன் நான் வாலாஜாபாத் வட்டம், வையாவூர் கிராமத்தில் வசித்து வருகிறேன். நான் தோட்டக்கலை துறையின் மூலம் 2022-23 ஆம் ஆண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் மூலம் காளான் குடில் அமைக்கலாம் என்பதை அறிந்து கொண்டேன். அதன்படி சுமார் 600 சதுர அடி அளவில் காளான் குடிலை 50% மானியத்தில் அமைத்தேன். காளான் உற்பத்திக்கான பயிற்சி ஆனது தோட்டக்கலைத்துறை அதிகாரிகளின் மூலம் அளிக்கப்பட்டது. நான் தற்போது 6 மாத காலமாக சிப்பி காளான் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறேன். மேலும் சிப்பி காளானுக்கு தேவையானது மக்களிடையே அதிகமாக உள்ளது. இதனை சந்தைபடுத்துவதற்கும் எளிதாக உள்ளது. இதன் மூலம் குறிப்பிடத்தக்க அளவு வருமானம் ஆனது தொடர்ச்சியாக கிடைக்கிறது.  இத்திட்டம் ஆனது எனக்கு பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது. இத்திட்டத்தினை வழங்கிய தோட்டக்கலை துறைக்கும், தமிழ்நாடு அரசுக்கும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

தொகுப்பு:

திரு.க.இராமச்சந்திர பிரபு, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம்.

திரு.எஸ்.சதீஷ் பாபு, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி), காஞ்சிபுரம்.

No comments

Thank you for your comments