சுதந்திர தின விழாவில் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் கொடியினை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார்...
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தி, 60 பயனாளிகளுக்கு ரூ.3,55,40,000/- மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள அண்ணா காவல் அரங்கில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தி, காவல்துறை மற்றும் ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
காவல் துறை, வருவாய் துறை, உள்ளாட்சித் துறை மற்றும் மருத்துவத்துறை ஆகிய துறைகளில் சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்கு பாராட்டு நற்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார்.
மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.2,50,500/- மதிப்பீட்டில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களும், ஊரக வளர்ச்சி துறை சார்பில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரூ.30,99,000/- மதிப்பீட்டில் தனிநபர் கிணறு மற்றும் 18 பயனாளிகளுக்கு ரூ. 3,04,95,000/- மதிப்பீட்டில் மகளிர் சுய உதவிக்குழு வங்கிக்கடன்களும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.60,000/- மதிப்பீட்டில் மின் மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரங்களும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில் 13 பயனாளிகளுக்கு ரூ.64,766/- மதிப்பீட்டில் தையல் இயந்திரங்களும், மாவட்ட தொழில் மையம் சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.2,50,000/- மதிப்பீட்டில் பல்வேறு தொழில்கள் தொடங்குவதற்கு தொழில் கடன் மானியமும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 4 நபர்களுக்கு ரூ.8,45,000/- மதிப்பீட்டில் வேளாண் இயந்திரங்களுக்கான மானியமும், தோட்டக்கலை துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.1,21,440/- மதிப்பீட்டில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின்கீழ் (NADP) (கல் பந்தல் மற்றும் பழ தொகுப்பு) அமைக்க மானியமும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின்கீழ் (KAVIADP) (பழ தொகுப்பு) அமைக்க மானியமும், தாட்கோ துறை சார்பில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் மூலம் தமிழ்நாடு தூய்மை பணியாளர் நலவாரியத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ.1,30,000/- மதிப்பீட்டில் (விபத்து இறப்பு மற்றும் பார்வை இழப்பு) நலத்திட்ட உதவிகளும், 1 பயனாளிக்கு ரூ. 2,25,000/- மதிப்பீட்டில் இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பயணியர் வாகனமும் என மொத்தம்60 பயனாளிகளுக்கு ரூ.3,55,40,706/- மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார்கள்.
மேலும் சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் மொழிப்போர் தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் காவல்துறை துணை தலைவர் திருமதி.ஆர்.பொன்னி இ.கா.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.எம்.சுதாகர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.வி.எம்.பி.எழிலரசன், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.வெங்கடேஷ், காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.சா.செல்வகுமார், மாவட்ட வனத்துறை அலுவலர் திரு.இரவி மீனா, இ.வ.ப., உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி.க.சங்கீதா, இ.ஆ.ப., அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments