சுதந்திர விழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் மகாத்மா காந்தி அவர்களின் திருவுருவ படத்திற்க்கு மலர் தூவி மரியாதை
இந்திய திருநாட்டின் 76வது சுதந்திர விழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் மகாத்மா காந்தி அவர்களின் திருவுருவ படத்திற்க்கு மலர் தூவி மரியாதை செலுத்தி இந்திய நாட்டின் மூவண்ண கொடியினை மாவட்ட ஊராட்சி தலைவர் படப்பை திரு.ஆ.மனோகரன் அவர்களும் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் திருமதி.நித்யா சுகுமார் அவர்களும் வீரவணக்கம் செலுத்தி இனிப்புகள் வழங்கினர்.
இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் திரு.எம்.எஸ்.சுகுமார், மாவட்ட ஊராட்சி செயலர் திருமதி.மல்லிகா, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் திருமதி.பொற்கொடி செல்வராஜ், திரு.ராமமூர்த்தி, திரு.சிவராமன் மற்றும் மாணவ மாணவிகள், அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments