Breaking News

ஆதரவின்றி அழுது கொண்டிருந்த 2 சிறுமிகள்... காப்பகத்தில் ஒப்படைப்பு..

 காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ரயில்வே சாலை பக்கதூர் கான் பேட்டை தெரு பகுதியில் சுமார் 4 வயது மற்றும் இரண்டு வயது மதிக்கத்தக்க இரு சிறு சிறுமிகள் அனாதையாக நின்று அழுது கொண்டிருந்துள்ளது.


இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிவகாஞ்சி போலீசாருக்கு தகவல் அளித்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  சிவகாஞ்சி போலீசார் இரு பெண் குழந்தைகளையும் மீட்டு உணவு அளித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் தீக்ஷிகா (வயது 4 ),ஏரிகா (வயது 2) என தெரியவந்தது, எந்த ஊரைச் சேர்ந்தவர்கள், எப்போது இந்த பகுதிக்கு வந்தார்கள், என்பது குறித்து சிவகாஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து குழந்தைகள் இருவரையும் காஞ்சிபுரம் சாலபோகம் பகுதியில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு காப்பகத்தில் ஒப்படைத்து உள்ளனர்.

No comments

Thank you for your comments